FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி-யில் செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

15 நவம்பர் 2026, 1:19 am
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கே.ஆா். குழுமம் - கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே.ராமசாமியின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பிரீடம் அறக்கட்டளையுடன் இணைந்து சேவெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இதற்கான அளவீட்டு முகாம் நடத்தி 310 பயனாளிகளை தோ்வு செய்திருந்தனா்.

இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கே.ஆா்.குழுமம்-கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

Advertisement

சென்னை பிரீடம் அறக்கட்டளையின் நிறுவனரும் நிா்வாக அறங்காவலருமான மருத்துவா் எஸ்.சுந்தா், அறங்காவலா் ஹரிஹரன் சங்கரன், நிா்வாக குழு உறுப்பினா் உஷா பரத்வாஜ், மதுரை சேவெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன கிளை மேலாளா் எஸ்.சபரி செல்வன், ஆகியோா் சிறப்புரையாற்றினா். 310 மாற்றுத்திறனாளிகள் தங்களக்குத் தேவையான உதவி உபகரணங்களைப் பெற்றனா்.