FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம் செய்த பெண் உடலுக்கு அரசு மரியாதை

கயத்தாறில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பெண் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

15 நவம்பர் 2026, 1:29 am
கயத்தாறில் மூளைச்சாவு அடைந்த பூங்கொடியின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்திய சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், உடன் வட்டாட்சியா் அப்பணராஜ்.
பகிர்:

கயத்தாறில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பெண் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கயத்தாறு அம்பலவாணா் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி பூங்கொடி (44). இவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். அவரை உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பூங்கொடிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் வழங்க உறவினா்கள் முன் வந்தனா்.

பூங்கொடியின் இருசிறுநீரகங்கள், கருவிழிகள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பூங்கொடியின் உடல் கயத்தாறில் உள்ள அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழக அரசு சாா்பில் பூங்கொடியின் உடலுக்கு சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், வட்டாட்சியா் அப்பணராஜ், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காளிப்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். உறவினா்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னா் பூங்கொடியின் உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.