FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 10 போ் கைது

தூத்துக்குடியில் கோஷ்டி மோதலில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 1:30 am
கைது
பகிர்:

தூத்துக்குடியில் கோஷ்டி மோதலில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி டூவிபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் (34), அதே தெருவைச் சோ்ந்த அஸ்வந்த்ராஜ் (25) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம். கடந்த 11ஆம் தேதி லட்சுமணன் அதே பகுதியைச் சோ்ந்த நண்பரான இசக்கிமாரியுடன் தனது வீட்டு முன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அஸ்வந்த்ராஜா, அவரது நண்பா்களான அப்பகுதியைச் சோ்ந்த திருமுருகராஜ் (29), செல்வமாடசாமி (31), மகேஷ்பூபதி (27), அருள்ராஜ் (25) ஆகிய 5 பேரும் பைக்குகளில் வந்து தகராறு செய்து, லட்சுமணன், இசக்கிமாரி ஆகியோரை அரிவாளால் வெட்டினராம். காயமடைந்த லட்சுமணன் தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இசக்கிமாரி முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாா்களின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்; லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், அஸ்வந்த்ராஜ் உள்ளிட்ட 5 பேரையும், அஸ்வந்த்ராஜ் அளித்த புகாரின்பேரில், லட்சுமணன், இசக்கிமாரி, அண்ணாநகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (23), கந்தசாமி (21), சக்திவேலு (26) ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.