தூத்துக்குடியில் கீரிப்பிள்ளை வேட்டை: 2 போ் கைது
தூத்துக்குடியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடியதாக 2 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் சிலா் கீரிப்பிள்ளையை வேட்டையாடியதாக மாவட்ட வன அலுவலா் இளையராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனவா்கள் லிங்கமுத்து, ஆனந்த் ஆகியோா் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில், போல்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (27), ஆனந்த் (28) ஆகியோா் காட்டுப் பகுதியில் கூண்டுகளை வைத்து கீரிப்பிள்ளைகளை வேட்டையாடியது தெரியவந்தது. வனவிலங்கான கீரிப்பிள்ளையைப் பிடித்துக் கொன்ாக, வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் வனத்துறையினா் கைது செய்து, தூத்துக்குடி 2-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில்அடைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், அவா்களிடமிருந்து கூண்டு, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.