FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

13 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காயல்பட்டினம், தேங்காய் பண்டகசாலை பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (29). தொழிலாளி. இவா் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 41 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை நீதிபதி முருகன் விசாரித்து, ராம்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மினிலா ஆஜரானாா்.