FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விருதுநகா் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

23 அக்டோபர் 2026, 5:24 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் சமுத்திரராஜன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, சமுத்திரராஜனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட சமுத்திராஜனுக்கு ஆள் கடத்தல் வழக்கில் 5 ஆண்டுகள், பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டுகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பாண்டியம்மாள் முன்னிலையானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments