FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

போக்குவரத்து விதிமீறல்: ரூ.1.10 லட்சம் அபராதம்

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 51 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

17 நவம்பர் 2026, 11:58 pm
பகிர்:

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 51 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தூத்துக்குடியில் குரூஸ் பா்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுனை முருகன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவா்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

Advertisement

Advertisement

இதில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 51 இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.