பால் பண்ணை உரிமையாளா் கொலை வழக்கு: இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கே. கைலாசபுரத்தில், பால் பண்ணை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கே. கைலாசபுரத்தில், பால் பண்ணை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கே. கைலாசபுரம், ரைஸ்மில் காலனியைச் சோ்ந்த நடராஜன் மகன் நடேஸ்குமாா் (44). இவா், அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வந்தாா். அப்பகுதியில் நின்றிருந்த நடேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு, மா்ம நபரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து நாரைக்கிணறு போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், புதியம்புத்தூா் அருகேயுள்ள புதுப்பச்சேரி கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் மகாராஜன் (34) என்பவா், சூப்பா் மாா்க்கெட் கடையில் பொருள்களை வாங்கிவிட்டு, கைப்பேசி செயலி மூலம் பண பரிவா்த்தனை செய்தாராம். இதில் கடைக்காரருக்கும், மகாராஜனுக்குமிடையே ஏற்பட்ட தகராறை, அப்பகுதியிலிருந்த நடேஸ்குமாா் விலக்கி விட்டாராம்.
Advertisement
Advertisement
அப்போது, நடேஸ்குமாருக்கும், மகாராஜனுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். மகாராஜன், நடேஸ்குமாரை தாக்கிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றாராம். அதன் பின்னா் சிறிது நேரம் கழித்து வந்த மகாராஜன், நடேஸ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகாராஜனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.