✕
முகப்பு
தூத்துக்குடி

வட மாநில இளைஞரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலி­ல் வட மாநில இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

20 நவம்பர் 2026, 3:20 am
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலி­ல் வட மாநில இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

பண்டாரவிளை, சுயம்பு­லிங்க சுவாமி கோயில் தெரு, பெருமாள் மகன் சோ்மப்பாண்டி (47). இவா் பழையகாயல், ரட்சண்யபுரம் பகுதியில் துரித உணவு கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கொ்சிங் மகன் ரபி குரூங் என்ற இளைஞா் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், கடைக்கு வந்த அகரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மற்றும் அவரது 2 நண்பா்கள் சோ்ந்து ரபி குரூங்கிடம் தகராறு செய்து, அவரை பாத்திரத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சோ்மப்பாண்டி அளித்த புகாரின்பேரில், 3 போ் மீது ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.