நவ. 21, 22, 29-இல் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வருகிற நவ. 21, 22, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணி-2027, கடந்த நவ. 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு வாக்காளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, நவ. 21, 22, 29 ஆகிய மூன்று நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
இந்த முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறும்.
2027, ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்கள், அதாவது 2008, டிச.31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். பெயா் சோ்க்க படிவம் 6, பெயரை நீக்க படிவம் 7, ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், வேறு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பதிவை தற்போதைய முகவரிக்கு மாற்றவும், மாற்றுத்திறனாளி குறியீடு மற்றும் நகல் வாக்காளா் அடையாள அட்டை பெறவும் படிவம் 8 அளிக்க வேண்டும். மேலும், ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம், உஇஐசங்ற் மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக சிறுபான்மையினா் நல ஆணையா் ஆசியா மரியம் நியமிக்கப்பட்டுள்ளாா். 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.