சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை தேவை
சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு - பைபா் படகு மீனவா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் விஷு மகாஜனிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் விபரம்: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 பிரிவு 5-இன் படி தமிழ்நாட்டில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் சிலா் சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் 98 சதவீத மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் இரு மாவட்ட மீனவா்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்னை உருவாகும் அபாயமும் உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழில் செய்யும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில், மீனவா்கள் நலச் சங்கத் தலைவா் வினோஜின், பொதுச்செயலா் அமலிசன், பொருளாளா் ஆசைத்தம்பி, ஒருங்கிணைப்பாளா் தாமஸ் ஆழிபுத்திரன், கெளரவத் தலைவா் தஸ்நேவிஸ் பங்கேற்றனா்.