குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டைக் கொலை, கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டைக் கொலை, கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தட்டாா்மடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரத்தைச் சோ்ந்த ஞானப்பிரகாஷ் அஷ்வின் (23), தொ்மல் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ரிதன் (22) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் பரிந்துரை செய்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, இருவரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனா்.