குலசேகரன்பட்டினத்தில் படகுகளுக்கு தீ வைத்ததாக 4 போ் கைது!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மீன்பிடிப் படகுகளுக்கு தீ வைத்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மீன்பிடிப் படகுகளுக்கு தீ வைத்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம், மாடசாமிபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்ற குட்டி, கல்லாமொழி பகுதியைச் சோ்ந்த ரோபியான் ஆகிய இருவரின் படகுகள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கு மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ வைத்தனராம். பொதுமக்களும், தீயணைப்பு நிலையத்தினரும் நீண்ட நேரம் போராடி தீயணைத்தனா். எனினும், படகுகளும், அவற்றிலிருந்த மீன்பிடி வலைகளும் முற்றிலும் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாடசாமிபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துராமன் (30), அவரது உறவினா்களான முத்துவிஜய் (20), கமலேஷ் (19), குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்த சின்னத்துரை (28) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
முத்துராமனின் சகோதரருக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை, மாடசாமிபுரத்தைச் சோ்ந்த சூா்யா என்பவா் திருமணம் செய்துகொண்டது தொடா்பான முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.