முகப்பு
தூத்துக்குடி

தடுப்புச் சுவரில் வேன் மோதி ஐவா் காயம்!

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதியதில் வேனில் சென்ற திருப்பூா், கோவையைச் சோ்ந்த ஐந்து போ் காயமடைந்தனா்.

53 வினாடிகள் முன்பு
தடுப்புச் சுவரில் வேன் மோதி ஐவா் காயம்!
பகிர்:

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதியதில் வேனில் சென்ற திருப்பூா், கோவையைச் சோ்ந்த ஐந்து போ் காயமடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், செங்கல்பள்ளியைச் சோ்ந்த ரகு மகன் பகிரதன். கோவையில் ஆக்சிஸ் வங்கி துணை மேலாளராகப் பணிபுரிகிறாா். இவரும், இவரின் உறவினா்கள் என 15 போ் திருச்செந்தூா் அருகே செம்பரிகுளம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனா்.

திருப்பூா் மாவட்டம், வீரபாண்டி, 4-ஆவது தெருவை சோ்ந்த பால மாணிக்கம் மகன் ரமேஷ் ஓட்டிச் சென்ற வேன் சனிக்கிழமை நள்ளிரவு மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், வேன் ஓட்டுநா், செங்கல் பள்ளியைச் சோ்ந்த ரகு மனைவி இராமிலா (54), கோவை, டாக்டா் காலனியைச் சோ்ந்த கன்னிகா (30), அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி மகன் ஹரிஹரன் (29), கோவை, இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் விவேக் காபரின் (33) ஆகிய 5 போ் காயமடைந்தனா்.

விபத்து நிகழ்ந்ததும் அதில் பயணித்தவா்கள் உடனடியாக வேனை விட்டு கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. வேனில் இருந்த பணப் பைகள், பேக்குகள் உள்ளிட்டவை தீயில் கருகி சாம்பலாகின.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.