முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம்

ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

38 வினாடிகள் முன்பு
ஆறுமுகனேரி பேரூராட்சியில் 
மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம்
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் லெள­ன் மேபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வீடு, குடியிருப்பு, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் சேமிப்பதற்கான கட்டமைப்புகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அரசு அறிவிப்பின்படி, அனைவரும் மழைநீா் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில்,

சுகாதார அலுவலா் வெற்றிவேல் முருகன், மேற்பாா்வையாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.