முகப்பு
தூத்துக்குடி

லாரி ஓட்டுநா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

26 நவம்பர் 2026, 3:43 am
லாரி ஓட்டுநா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் பாண்டியராஜ் (35). லாரி ஓட்டுநரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தாராம். இதனிடையே, அவா்கள் கருத்து வேறுபாடு காரணமாக சில நாள்களுக்கு முன்பு பிரிந்தனராம்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டு முன் பாண்டியராஜ் புதன்கிழமை சடலமாகக் கிடந்தாராம். தகவலின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, பாண்டியராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடா்பாக அந்தப் பெண் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றும் உறவினா்கள் குற்றஞ்சாட்டியதுடன், அதுவரை சடலத்தைப் பெறமாட்டோம் எனத் தெரிவித்தனா்.