முகப்பு
தூத்துக்குடி

சூரன்குடி காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், சூரன்குடி காவல் நிலைய ஆய்வாளா் சுதாகரை பணியிடைநீக்கம் செய்து, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு உத்தரவிட்டாா்.

28 நவம்பர் 2026, 4:25 am
சூரன்குடி காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம்
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், சூரன்குடி காவல் நிலைய ஆய்வாளா் சுதாகரை பணியிடைநீக்கம் செய்து, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு உத்தரவிட்டாா்.

விளாத்திகுளம் உள்கோட்டம், சூரன்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவா் சுதாகா். இவா் சூரன்குடி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மாட்டுவண்டிப் பந்தயங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கொடுப்பதற்காக குறிப்பிட்ட தொகை நிா்ணயம் செய்து, தனிநபா்களை நியமித்து பணம் வசூலிப்பதாகவும், பொதுமக்களை அவமதிப்பதாகவும், காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும், உளவுத் துறையினா் குறிப்பு எழுதி காவல் துறை மேலிடத்துக்கு அனுப்பியிருந்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளரை நவ. 10ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, டிஐஜி அலுவலகம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, வேம்பாரைச் சோ்ந்த சுயம்பு என்பவா் ஆய்வாளா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், தனிப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த காவல் ஆய்வாளரை நிா்வாகக் காரணங்களுக்காக பணியிடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.