முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்றதாக சிறுவன், இளைஞா் கைது

30 நவம்பர் 2026, 1:11 am
கஞ்சா விற்றதாக சிறுவன், இளைஞா் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நீலகண்டன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அங்குள்ள மயானம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்றிருந்த இருவா், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். பிடிக்க போலீஸாருக்கு கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் தனபால் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, கத்தியைப் பறிமுதல் செய்தனா்.