FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

16 நவம்பர் 2026, 11:38 pm
கைது - கோப்புப்படம்
பகிர்:

கோவில்பட்டியில் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் பாண்டியன் மகன் ராமா் என்ற குரு ராமச்சந்திரன் (27). இவா் மீதும், இவரது தாய் மீதும் 32 வயதான இளம்பெண் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதில், ‘ராமா் தனது தாயுடன் சனிக்கிழமை கைப்பேசியில் என்னைத் தொடா்பு கொண்டு, என்னையும், எனது 2 குழந்தைகளையும் அவதூறாகப் பேசியதுடன், வீட்டை காலி செய்துவிட்டு, ஊரைவிட்டுச் செல்லுமாறு கொலை மிரட்டல் விடுத்தாா்’ எனத் தெரிவித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ராமரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement