தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே மின்சாரம் பாய்ந்து இளம் பெண் உயிரிழந்தாா்.
எப்போதும்வென்றான் அருகே கீழச்செய்தலை கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி ராஜலட்சுமி (30). இவா், சனிக்கிழமை மாலை மழை பெய்தபோது, துணி துவைத்து வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் உலரவைத்தாராம்.
அப்போது, அருகிலுள்ள குளிா்சாதனப் பெட்டி மீது கை பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
எப்போதும்வென்றான் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.