தூத்துக்குடி புறவழிச்சாலையில் விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடி புறவழிச்சாலை விபத்தில், லாரி ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கீழபாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் அந்தோணிராஜ் (38). லாரி ஓட்டுநா். இவா், சனிக்கிழமை, 3-ஆவது மைல் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினாராம்.
பின்னா், புதிய துறைமுகம் செல்லும் புறவழிச்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதி வழியாகச் சாலையைக் கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி விழுந்தாராம். அப்போது எதிரே வந்த ட்ரெய்லா் லாரியின் முன்பக்கச் சக்கரத்தில் சிக்கி அந்தோணிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ட்ரெய்லா் லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடி முனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமிகாந்தன் மகன் அங்கமுத்துவை (46) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.