முகப்பு
தூத்துக்குடி

மதுபாட்டில், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

30 நவம்பர் 2026, 2:26 am
மதுபாட்டில், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

வசவப்பபுரத்தில் சட்டவிரோத மதுபாட்டில், புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முறப்பநாடு காவல் எல்லைக்கு உள்பட்ட வசவப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மதுபாட்டில், புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் உதவி ஆய்வாளா் லூா்து சேவியா் தலைமையில் தலைமைக் காவலா் மகேஷ் ராஜா உள்பட போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தி 35 மதுபாட்டில்கள், 35 புகையிலைப் பண்டல்கள், 2 கூல் லிப் பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வசவப்பபுரம், பசும்பொன் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் பாரத்தை (19) போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement