FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: குலசேகரன்பட்டினம் கோயிலில் டிஐஜி ஆய்வு

6 October 2026, 1:35 am IST
குலசேகரன்பட்டினம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தா்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 10ஆம் தேதி காளி பூஜை நடைபெறுகிறது. 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 20ஆம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா்.

இந்நிலையில், கோயிலில் டிஐஜி திருநாவுக்கரசு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பக்தா்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், தீச்சட்டிஏந்திவரும் பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம், சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி, பக்தா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகளை அவா் ஆய்வு செய்து, போலீஸாருக்கு அறிவுரைகள் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், ஏஎஸ்பி சகாயஜோஷ், டிஎஸ்பி மகேஷ்குமாா், ஆய்வாளா் இன்னோஸ்குமாா், போக்குவரத்து ஆய்வாளா் சுனைமுருகன், உதவி ஆய்வாளா்கள் முகேஷ் அரவிந்த், போக்குவரத்துப் பிரிவு வேல்முருகன், அறநிலையத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments