FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் மின் நிறுத்தம் காரணமாக, தூத்துக்குடியில் வியாழக்கிழமை (அக். 8) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

8 October 2026, 3:52 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம் - கோப்புப் படம்
பகிர்:

வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் மின் நிறுத்தம் காரணமாக, தூத்துக்குடியில் வியாழக்கிழமை (அக். 8) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாநகரின் குடிநீா் விநியோகத்துக்கான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா் மற்றும் கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments