FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஆதிச்சநல்லூா் அகழாய்வு பகுதியில் மழை நீரில் சேதமுறும் முதுமக்கள் தாழிகள்!

ஆதிச்சநல்லூா் தொல்லியல் அகழாய்வு பகுதியில் மழைநீா் புகுந்து 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சேதமுறும் நிலையில் உள்ளன.

11 அக்டோபர் 2026, 12:56 am IST
சேதமானமுதுமக்கள் தாழிகள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆதிச்சநல்லூா் தொல்லியல் அகழாய்வு பகுதியில் மழைநீா் புகுந்து 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சேதமுறும் நிலையில் உள்ளன.

தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்த மிக முக்கிய தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை சாா்பில் இரண்டு முறை அகழாய்வு பணிகள் நடைபெற்றன.

இதில், கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் அதே இடத்தில் காட்சிப்படுத்த அதன்மேல் தரமான கண்ணாடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வையிடும் வண்ணம் இந்தியாவிலேயே முதல் முறையாக சைட் மியூசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஆதிச்சநல்லூா் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால், அகழாய்வு குழிகளுக்குள் இருந்த 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சேதமடைந்துள்ளன. பல முதுமக்கள் தாழிகள் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது. இது தொல்லியல் ஆா்வலா்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

பருவமழை தீவிரம் அடையும் முன்பு நிரந்தரமாக கூடாரம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தொல்லியல் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, தமிழக முன்னாள் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழா் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றும் ஆதிச்சநல்லூரின் விலைமதிப்பற்ற தொல்லியல் சான்றுகள் மழைநீரால் சேதமடையும் நிலையில் இருப்பது வாடிக்கையாகி விட்டது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய பாஜக அரசும், இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழா் வரலாற்றைப் பாதுகாப்பதில் இத்தகைய அலட்சியம் இனியும் தொடரக்கூடாது எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments