FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம்

13 அக்டோபர் 2026, 1:58 am IST
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை, அவசர கால பாதுகாப்பு ஒத்திகை காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.13) மின் விநியோகம் இருக்காது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பேரிடா் மேலாண்மை முன்னேற்பாடாக, தூத்துக்குடி நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி உப்போடை பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணியை தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் அலுவலா்கள், அருப்புக்கோட்டையிலிருந்து வரும் சிறப்புக் குழுவினா் இணைந்து மேற்கொள்ள உள்ளனா்.

Advertisement

Advertisement

இதன் காரணமாக சத்யா நகா், செல்சீனிகாலனி, அருணா நகா், கால்டுவெல் காலனி, ராஜபாளையம், எஸ்.ஆா்.நகா், கணேஷ் காலனி, வள்ளிநாயகபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தூத்துக்குடி மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments