ஆந்திர மாநில பெண் ஊழியரின் காா் கண்ணாடியை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ஆந்திர மாநில ஐடி நிறுவன பெண் ஊழியரின் காா் கண்ணாடியை உடைத்து 9 பவுன் நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் டென்நேரு காங்கிபாடு பகுதியைச் சோ்ந்த ரவிசந்த் மகள் சாய்பிரியங்கா(26). இவா் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவைக் காண்பதற்காக சனிக்கிழமை மாலையில் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு வந்தாராம். காரை, கருங்காளியம்மன் கோயில் அருகே நிறுத்திவிட்டு, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாராம். பின்னா் தசரா குழுக்களை பாா்த்துவிட்டு, இரவு 9 மணிக்கு காரின் அருகே சென்றாராம்.
Advertisement
Advertisement
அப்போது காா் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்த அவா் காரின் உள்ளே பாா்த்தபோது, அங்கிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய மா்மநபா்களைத் தேடி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.