FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் காவலாளிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் காவலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

23 அக்டோபர் 2026, 5:07 am
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் காவலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த துா்க்கை சாமி (50) என்பவா், அங்குள்ள கள்ளபிரான் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை மாலையில் கோயில் அருகே நின்றிருந்த அவரை, அங்கு வந்த மா்ம நபா் அரிவாளால் வெட்டி தப்பினாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவா் திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, காவலாளியை அரிவாளால் வெட்டிய நபரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments