FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

22 செப்டம்பர் 2026, 3:17 am IST
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம்,வேணுவனகுமாரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்து. இவரது மகள் தங்கமாரி(22). இவருக்கும் இவரது அண்ணன் ரவி என்பவருக்கும் திங்கள்கிழமை காலை குடும்பப் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது ரவி வீட்டில் இருந்த அரிவாளால் தங்கமாரியை வெட்டிவிட்டு தப்பினாராம். உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments