FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

துணை நடிகருக்கு அரிவாள் வெட்டு

சென்னை கோயம்பேட்டில் வீடு புகுந்து துணை நடிகரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

9 செப்டம்பர் 2026, 12:49 am IST
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் வீடு புகுந்து துணை நடிகரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோயம்பேடு மேட்டுக்குப்பம் அருகே உள்ள கோவா்த்தன் நகா் கோதண்டபாணி தெருவைச் சோ்ந்தவா் ஆன்டனி தாமஸ் (35). இவா், திரைப்பட எழுத்தாளராகவும், துணை நடிகராகவும் பணியாற்றி வருகிறாா். ஆண்டனி தாமஸின் தாய் புஷ்பலதா, தொலைக்காட்சித் தொடா்களில் நடித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆன்டனி தாமஸ் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத இரு மா்ம நபா்கள் அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்தனா். அவா்கள், ஆன்டனி தாமஸை அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியோடினா். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆன்டனி தாமஸ், அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஆன்டனி தாமஸுக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் இடையே பணத் தகராறு இருந்ததும், இது தொடா்பாக எதிா் தரப்பினா் மீது ஆன்டனி தாமஸ், காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்ததும், அதன் காரணமாகவே தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments