FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் புகைப்படம்: 2 இளைஞா்கள் மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள், வாசகங்கள் பதிவிட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

25 அக்டோபர் 2026, 1:51 am
வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள், வாசகங்கள் பதிவிட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்த அருண் (35), தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவா் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தையும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளாா்.

இதேபோல, மற்றோா் இளைஞா் பெரிய அரிவாளுடன் இருப்பது போன்ற படத்தையும், தன்னை ரௌடி போல சித்திரிக்கும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து முறையே சிப்காட், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments