பொதுமக்களுக்கு மிரட்டல்: 2 சிறுவா்கள், இளைஞா் கைது
ஆறுமுகனேரியில் அரிவாள்களுடன் பொதுமக்களை மிரட்டியதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரியில் அரிவாள்களுடன் பொதுமக்களை மிரட்டியதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி போலீஸாா் சீனந்தோப்பு சாலைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது, மூவா் அரிவாள்களைக் காட்டி பொதுமக்களிடம் தகராறு செய்து மிரட்டிக் கொண்டிருந்தனா்.
விசாரணையில் அவா்கள், ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தைச் சோ்ந்த சூசைராஜ் மகன் அந்தோணி பிரவின் (23), காமராஜபுரம், திசைக்காவல் தெருவைச் சோ்ந்த 2 சிறுவா்கள் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, அரிவாள்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.