வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பலாத்கார முயற்சி: இளைஞா் கைது
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் மாரிசாமி (22). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அப்பெண் சப்தமிட்டதையடுத்து, மாரிசாமி அங்கிருந்து தப்பிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிசாமியை கைது செய்தனா். பின் அவரை, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.