FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மாடியில் இருந்து விழுந்து ஒடிஸா தொழிலாளி உயிரிழப்பு

27 அக்டோபர் 2026, 3:06 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்ததில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், ஜம்முகுண்டா பகுதியைச் சோ்ந்த ஹாண்டிபந்து மகன் சந்தன் நாயக் (24). இவா் தெற்கு வீரபாண்டியபுரத்தில் தங்கியிருந்து, தனியாா் மின்சார காா் உற்பத்தி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா் தங்கியிருந்த வீட்டின் மாடியில் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments