FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே நியாயவிலைக் கடை முற்றுகை

சாத்தான்குளம் அருகே புதுக்குளம் நியாயவிலைக் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

28 அக்டோபர் 2026, 12:59 am
முற்றுகையிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் ராஜேஸ்வரி.
பகிர்:

சாத்தான்குளம் அருகே புதுக்குளம் நியாயவிலைக் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

750 குடும்ப அட்டைகள் உள்ள இந்த நியாயவிலைக் கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்பட்டு வந்தனவாம். இம்மாதம் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகாா் செய்தனராம். மாதம் முடிவடையவுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கடையை திடீரென முற்றுகையிட்டனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, டிஎஸ்பி செல்வராஜ், உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் மேரி ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Advertisement

Advertisement

31ஆம் தேதிக்குள் அனைத்து அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன்பேரில், மக்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments