FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலமாக 17 வயது சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி, அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

28 அக்டோபர் 2026, 1:18 am
- கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலமாக 17 வயது சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி, அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம், எம். தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் முத்துராஜ் (22). இவா், தூத்துக்குடியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளாா். அப்போது, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், சிறுமியுடன் எடுத்த புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து கண்டித்த சிறுமியின் தாயாருக்கு, முத்துராஜ் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, முத்துராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments