FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 5-வது நாளாக விசைப் படகுகள் நிறுத்தி வைப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் விசைப் படகுகள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

30 அக்டோபர் 2026, 4:51 am
கோப்புப்படம்
பகிர்:

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் விசைப் படகுகள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகக் கடலில் மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனால், கடந்த 25-ஆம் தேதி முதல் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments