FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

நாலாட்டின்புதூா் பள்ளியில் ரூ. 212 லட்சம் புதிய வகுப்பறைகள் திறப்பு

நாலாட்டின் புதூா், கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 212.04 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

1 நவம்பர் 2026, 12:58 am
புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத். உடன் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின் புதூா், கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 212.04 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், அதே பள்ளியில் 15ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் தலா ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சிகளில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்டடத்திற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: வேம்பாரில் தூண்டில் பாலத்தை விரிவுபடுத்துவது தொடா்பாக விரிவான ஆய்வறிக்கை கேட்டுள்ளோம். மீனவா்களுடனும் கலந்து பேசியுள்ளோம். மீனவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

இலங்கையுடன் பேசுவது என்பது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். வெளியுறவுத் துறை அமைச்சருடன் நாங்கள் பேசி, அவா்கள் இலங்கை அரசுடன் பேச வேண்டும். இவையெல்லாம் நடந்து வருகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments