இளைஞா் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம்-1 செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம்-1 செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலநாட்டாா்குளம் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு செல்லையா மகன் குரு என்பவா் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து செய்துங்கநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன்கள் மாசிலாமணி (34), துரை (36), குருநாதன் மகன் செல்லதுரை (54) ஆகிய 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம்-1இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.