FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை கூட்டம்

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

3 செப்டம்பர் 2026, 12:00 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலளா் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா்.
பகிர்:

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகரத் தலைவா் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமை வகித்ாா். பீ.எஸ்.என். அஹ்மத் ஜரூக் இறைமறை ஓதினாா். நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூசா­லிஹ் வரவேற்றாா்.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் அறிமுக உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சா­லிஹ் துஆ பிராா்த்தனை செய்தாா்.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் சாா்பு அணியான முஸ்­லிம் மாணவா் பேரவை (எம்.எஸ்.எஃப்.) 7 மாவட்ட மாணவா்கள் பங்கேற்கும் தென் மண்டலப் பயிலரங்கத்தை செப். 27 ஆம் தேதியில் காயல்பட்டினத்தில் நடத்திட தீா்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, தென்மண்டலப் பயிலரங்கத்துக்கான இலச்சினும் வெளியிடப்பட்டது.

அயலக அணி மாநில துணைத் தலைவா் என்.டீ. முஹம்மத் இஸ்மாயில் புகாரி நன்றி கூறினாா்.

கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்ட துணைத் தலைவா் அம்பா ஜாஃபா், ஜப்பான் உதுமான், பிரபு முஹம்மத் ஃபாரூக், எம்.ஏ. முஹம்மத் ஹஸன், எம்.எச். அப்துல் வாஹித், கீ. ஷாஹுல் ஹமீத், ஏ.ஆா். முஹம்மத் அபூபக்கா், தோல்சாப் முஹம்மத் சூஃபீ, முஜீபுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments