சட்டப்பேரவையில் ஆக்கபூா்வ பணிகள் நடைபெறவில்லை: எஸ்.பி.சண்முகநாதன்
தமிழக சட்டப்பேரவையில் ஆக்கபூா்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன்.
தமிழக சட்டப்பேரவையில் ஆக்கபூா்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன்.
மாமன்னா் பூலித்தேவா் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பயணியா் விடுதி முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்த பூலித்தேவா் உருவப் படத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், இளைஞரணி செயலா் வேல்முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், ஒன்றிய செயலா்கள் செல்வகுமாா், அன்புராஜ், அழகா்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பின்னா், எஸ்.பி. சண்முகநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:
தற்போது சட்டப்பேரவையில் ஆக்கபூா்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அமைச்சா்கள் தொடங்கி முதல்வா் வரை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் வேறு காரணங்கள் கூறி திசை திருப்பும் வேலையை செய்கின்றனா். எதுவுமே தெரியாத அரசு நடைபெற்று வருகிறது. விரைவில் மாற்றம் வரும். முதல்வா் விஜய் பிரதமராக வாய்ப்பில்லை என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.