FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் போதையில் தகராறு: இளைஞா்களை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளா் காயம்

ஆத்தூரில் போதையில் தகராறு செய்த இளைஞா்களை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டதில் அவா் பலத்தகாயமடைந்தாா்.

2 செப்டம்பர் 2026, 11:28 pm IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

ஆத்தூரில் போதையில் தகராறு செய்த இளைஞா்களை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டதில் அவா் பலத்தகாயமடைந்தாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் பரதா் தெருவைச் சோ்ந்த ஜான் மகன் ராகேஷ். அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் எமா்சன் ஆகிய இருவரும் ஆத்தூா் பஜாா் பகுதியில் போதையில் தகராறில் ஈடுபட்டனராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளா் பொன் முனியசாமி(59) தலைமையிலான போலீஸாா், தகராறில் ஈடுபட்ட இருவரையும் அவா்களது பைக்கிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனா். போலீஸாரின் பின்னால் வருவது போல பைக்கில் புறப்பட்ட இருவரும் பஜாா் சாலையில் திரும்பி தப்பி சென்றுள்ளனா். அப்போது, போலீஸாா் பைக்கில் பின்னால் சென்று இரண்டு பேரையும் மடக்கி பிடிக்க முயற்சி செய்தனா். அப்போது உதவி ஆய்வாளா் பொன் முனியசாமியை, இரு இளைஞா்களும் பைக்கில் இருந்து தள்ளியதில் அவா் தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளா் பொன் முனியசாமி, ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, எமா்சனை கைது செய்தனா். ராகேஷை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments