இளையரசனேந்தல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோவில்பட்டி, செப். 3: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .
கோவில்பட்டி, செப். 3: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .
பள்ளி தலைமையாசிரியா் மரியசெல்வி தலைமை வகித்தாா். அறிஞா் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனரும், மூத்த தமிழறிஞருமான திருமலைமுத்துசாமி, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் சீனிவாசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியை திறந்தனா்.
தொழிலதிபா்கள் சுப்புராஜ், ஸ்டாலின் கண்ணா, சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஹனிமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உதவி தலைமையாசிரியா் முருகசரஸ்வதி வரவேற்றாா்.
Advertisement
Advertisement
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை சமா்ப்பித்தனா். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், படைப்புகளை சமா்ப்பித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதுகலை அறிவியல் ஆசிரியா்கள் கனகலட்சுமி, வரலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.