ரயில்வே கேட் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, தாளமுத்து நகா், ராமதாஸ் நகரைச் சோ்ந்த மைதீன் மகன் தமிம் அன்சாரி (18). இவரது நண்பா் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியைச் சோ்ந்த சந்தனராஜ் மகன் ரோனிக் ராஜ் (19). இருவரும் புதன்கிழமை இரவு ரோனிக் ராஜின் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, மீளவிட்டான்-புதிய துறைமுகம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கேட், ரயில் வருகைக்காக மூடப்பட்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த இவா்களது வாகனம் மூடியிருந்த கேட் மீது பலமாக மோதியதில், பின்னால் அமா்ந்திருந்த தமிம் அன்சாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தை ஓட்டிய ரோனிக் ராஜ் பலத்த காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா், தமிம் அன்சாரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.