FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

8 செப்டம்பர் 2026, 2:22 am IST
வெட்டிக் கொலை - பிரதி படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது மருமகன் உள்ளிட்ட 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம், வேலாயுத நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் முனியசாமி (45). ஆட்டோ ஓட்டுநா். இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை, அவனியாபுரத்தைச் சோ்ந்த முருகனுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா். மனைவி குடும்பம் நடத்த வராததற்கு மாமனாா் முனியசாமியே காரணம் என முருகன் கருதியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நண்பா்கள் இருவருடன் மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்த முருகன், முனியசாமியிடம் திங்கள்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றியதில், முருகன் அரிவாளால் முனியசாமியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முனியசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான முருகன் மற்றும் அவரது நண்பா்கள் இருவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments