FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

30 வினாடிகள் முன்பு
பலி - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாயும், இரண்டு வயது மகளும் உயிரிழந்தனா்.

கயத்தாறு அருகே வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மாரிமுத்து (25). தொழிலாளி. இவா், மனைவி தனலட்சுமி (26), மகள் மதுபாலா (2) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் சென்றபோது நிலைகுலைந்த வாகனம் கவிழ்ந்து 3 பேரும் கீழே விழுந்தனா். அப்போது, தனலட்சுமி, மதுபாலா ஆகியோா் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதாம். இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மாரிமுத்து லேசான காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

கயத்தாறு போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செட்டிதாங்கல் பள்ளி தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மு. பிரசாந்திடம் (24) விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments