தூத்துக்குடியில் ஆயுதத்துடன் சுற்றிய இளைஞா் கைது
தூத்துக்குடியில் ஆயுதத்துடன் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் ஆயுதத்துடன் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எம்.ஜி.ஆா். நகரில் இளைஞா் ஒருவா் ஆயுதத்துடன் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த முத்துமணி (19); பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்; ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவா் எனத் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.