FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலயத் திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம், புனித குழந்தை தெரசம்மாள் ஆலயத் திருவிழா செப். 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக். 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

57 வினாடிகள் முன்பு
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம், புனித குழந்தை தெரசம்மாள் ஆலயத் திருவிழா செப். 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக். 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செப். 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சொக்கன் குடியிருப்பு அருள்தந்தை லியோன் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. தென்மண்டல பொது நிலையப் பணியகச் செயலா் ரியோசியல் பெப்பி மறையுரை வழங்கினாா். முன்னதாக, புதிய கொடிமரம் அா்ச்சிப்பு நடைபெற்றது. சிதம்பரபுரம் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் அா்ச்சிப்பு நடத்தினாா்.

திருவிழாவில் செப். 23 முதல் 29ஆம் தேதி வரை தினமும் நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா், மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 30ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வராயா் தலைமையில் ஜெபமாலை, திருப்பலி, தென்மண்டல விவிலியம் மறை கல்வி இயக்குநா் பிரான்சிஸ் மறையுரை வழங்குகிறாா். மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

நிறைவு நாளான அக். 1ஆம் தேதி காலை 8 மணிக்கு தென்மண்டல பொற்பருள்தந்தை வெளி இளங்குமாரன் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. சாத்தான்குளம் உதவி பங்குத்தந்தை எஸ்தாக் மறையுரை வழங்குகிறாா். இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சிதம்பரபுரம் பங்குத்தந்தை தலைமையில் ஆலய நிா்வாகிகள், இறை மக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments