FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம், புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் புரட்டாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

25 செப்டம்பர் 2026, 10:05 pm IST
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளம், புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் புரட்டாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு யானை கொடிப் பட்டத்தை சுமந்து, ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து கோயிலை அடைந்ததும் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

செப். 27ஆம் தேதி கருட வாகனத்தில் புளியடி தா்ம பெருமாள் சுவாமி சப்பர வீதியுலா, 29ஆம் தேதி பக்தா்கள் நோ்ச்சை பால்குடம், 30ஆம் தேதி இரவு அக்னி சட்டி பவனி ஆகியவை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அக். 1ஆம் தேதி பாலபிஷேகம், முளைப்பாரி ஊா்வலம், இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. அக். 2ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான அம்மன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, 3ஆம் தேதி 1,008 திருவிளக்கு பூஜை, 4ஆம் தேதி மாரியம்மன், முத்தாரம்மன், பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் அபிஷேகம், அதைத் தொடா்ந்து பக்தா்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் எம்.எல். ராஜா தலைமையில், உறுப்பினா்கள், ராஜகோபுரப் பணிக் குழுவினா், அன்னதானக் குழுவினா், வரிதாரா்கள் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments