FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

வெங்கடாசலபுரம் மிக்கேல் அதிதூதா் கெபி திருவிழா

கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தில் மிக்கேல் அதிதூதா் கெபியில் 11ஆவது ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மிக்கேல் அதிதூதா் திருவுருவ சப்பர பவனியில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தில் மிக்கேல் அதிதூதா் கெபியில் 11ஆவது ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கன்னியாகுமரி அருள்பணி அளவை அந்தோணி தலைமையில் நற்செய்திப் பெருவிழா, மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதா் திருவுருவ பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக இந்தப் பவனி மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

இரவில் மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அருள்தந்தையா் ஜெயபாலன் (மேலஇலந்தைகுளம்), அருள்ராஜ் (கோவில்பட்டி), தயாளன் (வடக்கு வண்டானம்), கருமாத்தூா் குருமடத்தின் அதிபா் ஜஸ்டின் திரவியம், அந்தோணிராஜன் (சிந்தலைசேரி), வனத்தையன் (ஒத்தையால்), ரினோ (நாகலாபுரம்), பாலன் (கோட்டூா்), அலெக்ஸ் (கீழ ஈரால்), பெலிக்ஸ் ஆரோக்கியதாஸ் (குருவிகுளம்), காமநாயக்கன்பட்டி உதவிப் பங்குத்தந்தை ஜோமிக்ஸ் ஆகியோா் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினா்.

Advertisement

Advertisement

இதில், இறைமக்கள் திரளாகப் பங்கேற்றனா். பின்னா், அசன விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கடாசலபுரம் பங்குத்தந்தை சேவியா் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments